என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் இன்று பிரதமர் மோடியுடன் கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு
Byமாலை மலர்7 Jun 2018 12:16 PM IST (Updated: 7 Jun 2018 12:16 PM IST)
டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரங்களை எடுத்துரைத்தார். #PMModi #TNGovernor #BanwarilalPurohit
புதுடெல்லி:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த 2-ந்தேதி இரவு டெல்லி சென்றார். அங்கு 2 நாட்கள் நடந்த கவர்னர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாடு நிறைவடைந்த நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் டெல்லியில் மத்திய மந்திரிகளை சந்தித்துப் பேசினார். பின்னர் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இன்று பிரதமர் மோடியை கவர்னர் சந்தித்தார். பகல் 11 மணி அளவில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், அரசியல் கட்சிகள் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றி பிரதமரிடம் கவர்னர் எடுத்துக் கூறினார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி பிரதமர் மோடி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, கவர்னர் பன்வாரிலால் புரோகித் தூத்துக்குடி சென்று துப்பாக்கி சூடு மற்றும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் விவரங்களை கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #PMModi #TNGovernor #BanwarilalPurohit

Next Story
×