என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போர் நிறுத்தத்தின் புனிதத்தை மதிக்காத பாகிஸ்தான்
Byமாலை மலர்13 Jun 2018 3:12 PM IST (Updated: 13 Jun 2018 3:12 PM IST)
போர் நிறுத்தத்தின் புனிதத்தை பாகிஸ்தான் எப்போதுமே மதித்ததில்லை என எல்லை பாதுகாப்பு படை உதவி இயக்குனர் ஜெனரல் கமல்நாத் சவுபே தெரிவித்துள்ளார். #BSF #ADG #KamalNathChoubey #PakistanCeasefire
ஜம்மு:
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய செயலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையே, ஜம்முவின் சம்பா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும், 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், எல்லை பாதுகாப்பு படை உதவி இயக்குனர் ஜெனரல் கமல்நாத் சவுபே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
போர் நிறுத்தம் என்பது இருநாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தம். நாம் அந்த ஒப்பந்தத்தை மதித்து நடந்து வருகிறோம். ஆனால், பாகிஸ்தான் போர் நிறுத்தத்தின் புனிதத்தை எப்போதுமே மதிப்பதில்லை என தெரிவித்துள்ளார். #BSF #ADG #KamalNathChoubey #PakistanCeasefire
Next Story
×