search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் கவர்னர் என்.என் வோஹ்ரா
    X
    காஷ்மீர் கவர்னர் என்.என் வோஹ்ரா

    அமர்நாத் யாத்திரைக்கு பிறகு காஷ்மீர் மாநிலத்துக்கு புதிய கவர்னர் நியமனம்

    அமர்நாத் யாத்திரை முடிவடைந்ததும், காஷ்மீர் மாநிலத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட இருப்பதாக பாஜகவின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். #BJPDumpsPDP #Newgovernor #kashmir
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றுக்கொண்டது. இதனால் அம்மாநிலத்தின் முதல்மந்திரி மெகபூபா முப்தி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதற்காக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உடன் உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் வருகிற 28-ம் தேதி துவங்கி அடுத்த 2 மாதங்கள் அமர்நாத் யாத்திரை துவங்க உள்ளது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    2 மாதங்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை முடிவடையும் வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய கவர்னரான என்.என் வோஹ்ரா பதவி வகிப்பார் என்றும், அமர்நாத் யாத்திரை முடிவடைந்த பிறகு காஷ்மீர் மாநிலத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட உள்ளதாகவும் பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். #BJPDumpsPDP #Newgovernor #kashmir
    Next Story
    ×