என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து சிவ சேனா வெளியேறினால் ஆதரவு அளிப்போம் - விவசாய சங்கம் அறிவிப்பு
Byமாலை மலர்27 Jun 2018 3:29 PM IST (Updated: 27 Jun 2018 3:29 PM IST)
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து சிவ சேனா வெளியேறினால் அந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக விவசாய சங்கம் அறிவித்துள்ளது. #ShivSena
மும்பை:
பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிர அரசுகளில் சிவசேனா முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும் பா.ஜனதாவை பல்வேறு நிலைகளில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ஜனவரி மாதம் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், 2019 பாராளுமன்றத் தேர்தலிலும், மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலிலும் தனியாக போட்டியிடுவோம் என அறிவித்தார். மராட்டியத்தில் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களுக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவிக்கிறது.
இந்நிலையில் சிவசேனா, பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகினால் நாங்கள் ஆதரவளிப்போம் என மராட்டிய மாநில விவசாய சங்க தலைவரும், எம்.பி.யுமான ராஜூ செட்டி கூறியுள்ளார்.
இதுபற்றி ராஜூ செட்டி கூறுகையில், “மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள பா.ஜனதா கூட்டணி அரசில் இருந்து சிவசேனா விலகினால், நாங்கள் அவர்களுடன் கைகோர்ப்போம்.
இந்தியாவின் மக்கள் தொகையில் 50 சதவிதத்திற்கும் அதிகமானோர் கிராமப்புறங்களில்தான் வசிக்கிறார்கள். அவர்கள் பா.ஜனதா அரசின் கொள்கையினால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். நான் மிகவும் வேதனை மற்றும் ஏமாற்றம் அடைந்ததால்தான் அக்கூட்டணி ஆட்சியில் இருந்து வெளியேறினேன். சிவசேனா கிராமபுறங்களிலும், நகர்புறங்களில் ஸ்திரமாக காலூன்ற எங்களுடைய இயக்கம் மிகவும் ஆதரவாக இருக்கும்” என்றார்.
மத்திய அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது என்று கூறி கடந்த வருடம் செட்டி தலைமையிலான விவசாய சங்கம், பா.ஜனதா கூட்டணி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது. #ShivSena

Next Story
×