search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தற்காலிக டி.ஜி.பி.க்களை நியமிக்க கூடாது - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
    X

    தற்காலிக டி.ஜி.பி.க்களை நியமிக்க கூடாது - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்காலிகமாக டி.ஜி.பி.க்களை நியமிக்க கூடாது என காவல்துறை சீர்திருத்தம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி :

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்காலிகமாக டி.ஜி.பி.க்களை நியமிக்க கூடாது என பிரகாஷ் சிங் என்பவர் உச்சநீதிமன்றதில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘டி.ஜி.பி-க்கள் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாக புதிய டி.ஜி.பி.க்களின் பரிந்துரை பெயர் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்துக்கு (UPSC) அனுப்ப வேண்டும்.

    மத்திய பணியாளர் தேர்வு ஆணையம், தேர்வு செய்யும் அதிகாரிகளின் பெயர்கள் அந்தந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுக்கு அனுப்பப்பட்டு, அவர்களில் ஒருவரை டிஜிபியாக நியமனம் செய்ய வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும், தற்காலிக டி.ஜி.பி.க்களாக யாரையும் நியமிக்க கூடாது எனவும், குறிப்பாக ஓய்வு பெறும் வயதில் உள்ளவர்களை டி.ஜி.பி.யாக நியமிக்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×