search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயோத்தி பிரச்சனை - சுப்பிரமணிய சுவாமி மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
    X

    அயோத்தி பிரச்சனை - சுப்பிரமணிய சுவாமி மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

    அயோத்தியில் வழிபாடு நடத்த உரிமை கோரிய சுப்பிரமணிய சுவாமியின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி :

    அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு உரிமை கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறி தனியாக மனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையில் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று சுப்பிரமணிய சுவாமியின் மனுவை பரிசீலனை செய்தது.

    அப்போது, சர்ச்சைக்குரிய இடமான அயோத்தியில் வழிபாடு நடத்துவது தொடர்பான சுவாமியின் மனுவை அவரச வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த மனுவை பின்னர் தாக்கல் செய்யுங்கள் என சுவாமிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    ஏற்கனவே இதேபோன்று அவசர வழக்காக விசாரிக்க பட்டியலிடும்படி சுவாமி மனு தாக்கல் செய்தபோதும், நீதிபதிகள் அதனை ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×