search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூலை 15 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - உ.பி. அரசு அதிரடி
    X

    ஜூலை 15 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - உ.பி. அரசு அதிரடி

    உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் கைப்பை மற்றும் இதர பிளாஸ்டிக் உபயோகப் பொருட்களுக்கு ஜூலை 15 முதல் தடை விதித்து யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார். #UPbansplastic
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முன்னர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடைபெற்றபோது, 40 மைக்ரான்களுக்கு அதிகமான கனத்திலான  பிளாஸ்டிக் கைப்பை மற்றும் இதர பிளாஸ்டிக் உபயோகப் பொருட்களை தயாரிக்கவும், விற்கவும்  தடை விதித்து கடந்த 2015-ம் ஆண்டில் உத்தரவிடப்பட்டது.

    எனினும், இந்த உத்தரவு அங்கு பரிபூரணமாக கடைபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் கைப்பை மற்றும் இதர பிளாஸ்டிக் உபயோகப் பொருட்களுக்கு ஜூலை 15 முதல் தடை விதித்து யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.



    இதுதொடர்பாக, இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் யோகி ஆதித்யாநாத் வெளியிட்டுள்ள பதிவில், ’ஜூலை 15-ம் தேதியில் இருந்து பிளாஸ்டிக் கப்புகள், டம்ளர்கள் ஆகியவற்றை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை அமல்படுத்துவதற்கு பொதுமக்களாகிய நீங்கள் நல்லமுறையில் ஒத்துழைக்க வேண்டும்’ என கேட்டு கொண்டுள்ளார். #UPbansplastic  
    Next Story
    ×