search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    குஜராத் முன்னாள் முதல் மந்திரி மகன் பா.ஜ.க.வில் சேர்ந்தார்
    X

    குஜராத் முன்னாள் முதல் மந்திரி மகன் பா.ஜ.க.வில் சேர்ந்தார்

    காங்கிரஸ் கட்சி தலைமைக்கு எதிராக போர்குரல் எழுப்பிய குஜராத் முன்னாள் முதல் மந்திரி சங்கர்சின்ஹ் வகேலாவின் மகன் மகேந்தர்சிங் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். #ShankarsinhVaghelas #bjp
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் முன்னர் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் 1996-97 ஆண்டுகளுக்கு இடையில் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் சங்கர்சின்ஹ் வகேலா.

    கடந்த 2017-ல் நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்னர் கட்சி தலைமை மீது கொண்ட அதிருப்தியால் காங்கிரஸ் கட்சியில் இருந்து சங்கர்சின்ஹ் வகேலா விலகினார். அவருடன் மேலும் 13 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரசில் இருந்து விலகினர். அவர்களில் சிலர் அப்போது பா.ஜ.க.வில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டனர்.

    சங்கர்சின்ஹ் வகேலாவின் மகனான  மகேந்தர்சின்ஹ் அம்மாநில சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக கடந்த 2007-12, 2012-17 ஆண்டுகளில் இருமுறை பதவி வகித்துள்ளார். கட்சி தலைமைக்கு எதிராக தனது தந்தை செயல்பட்டபோது, 2017-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற மேல்சபை தேர்தலில்  காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அகமது பட்டேலுக்கு எதிராக இவர் வாக்களித்திருந்தார்.

    இந்நிலையில், மகேந்தர்சின்ஹ் இன்று பா.ஜ.க.வில் இணைந்ததாக குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர் ஜிட்டு வாஹினி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். #ShankarsinhVaghelas #bjp
    Next Story
    ×