search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் தலைமையில் காங்.காரிய கமிட்டி ஆலோசனை கூட்டம் தொடங்கியது
    X

    ராகுல் தலைமையில் காங்.காரிய கமிட்டி ஆலோசனை கூட்டம் தொடங்கியது

    காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் சோனியாகாந்தி, மன்மோகன்சிங், உள்ளிட்ட மூத்த தலைவர்கள் காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு (2019) மத்தியில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க ஆளும் பா.ஜனதாவும் எதிர்க்கட்சியான காங்கிரசும் தயாராகி வருகின்றன.

    புதிய கட்சிகளை இணைத்தும் பழைய கூட்டணியை வலுப்படுத்தியும் வருகின்றன. பா.ஜனதாவும், காங்கிரசும் நேருக்கு நேர் களத்தில் மோத தயாராகி வருகின்றன. இதுதான் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடியை நேருக்கு நேர் குறிவைத்து தாக்கிப் பேசினார்.



    அடுத்த கட்டமாக பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று கூடியது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சோனியாகாந்தி, மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே வரும் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. #Congress #RahulGandhi #SoniaGandhi
    Next Story
    ×