search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் வருவதால் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு - ப.சிதம்பரம் கருத்து
    X

    தேர்தல் வருவதால் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு - ப.சிதம்பரம் கருத்து

    தேர்தல் நெருங்குவதால் வரி குறைக்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். #Chidambaram #GST

    புதுடெல்லி:

    டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், காலணி உள்ளிட்ட பல பொருட்களின் மீதான சரக்கு சேவை வரி குறைக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் தேர்தல் நெருங்குவதால் வரி குறைக்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஜி.எஸ்.டி. கவுன்சில் 100 விதமான பொருட்களின் விலையை குறைத்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மத்திய அரசு வரிகளை குறைக்கிறது, பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி தேர்தல் நடை பெறுவது நல்லது. நாங்கள் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் சொன்ன அறிவுரையை அரசு பின் பற்றாமல் தற்போது வரிகளை குறைத்துள்ளது. தற்போதைய ஜி.எஸ்.டி. இன்னும் மறு சீரமைப்பு செய்யப்படவில்லை.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார். #Chidambaram #GST

    Next Story
    ×