என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
11 பேர் தற்கொலை செய்த குடும்பத்தில் வளர்ந்த நாயும் அதிர்ச்சியால் இறந்தது
Byமாலை மலர்23 July 2018 5:53 PM IST (Updated: 23 July 2018 5:53 PM IST)
புதுடெல்லியில் மர்மமான முறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர்களது செல்ல பிராணியான டாம்மி எனும் நாய் அதிர்ச்சியால் நேற்று உயிரிழந்துள்ளது. #Delhi
புதுடெல்லி:
டெல்லியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சமீபத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்களின் மோட்ச வாழ்வுக்கு சாத்தான் உதவும் என்று அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், அவர்களின் இறப்பில் இன்றளவும் மர்மம் நிலவி வருகிறது. இந்த நிலையில், அவர்கள் வளர்த்த டாம்மி எனும் செல்ல பிராணியை அவர்களின் தற்கொலைக்கு பிறகு விலங்குகள் நல ஆர்வலர் சஞ்சை மொகபாத்ரா வளர்த்து வந்தார். நேற்று மாலை நடைபயணம் சென்ற நாய் டாம்மி, திடீரென்று மயங்கி விழுந்து இறந்துள்ளது.
இதையடுத்து, அந்த நாயின் இறப்பு குறித்து போலீசார் மற்றும் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நாயின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், நாய் அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். #Delhi

Next Story
×