search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    இந்தியாவில் தயாராகும் 343 மருந்துகளை தடை செய்ய மத்திய அரசு குழு பரிந்துரை
    X

    இந்தியாவில் தயாராகும் 343 மருந்துகளை தடை செய்ய மத்திய அரசு குழு பரிந்துரை

    இந்தியாவில் தயாராகும் 343 மருந்துகளை தடை செய்யலாம் என்று மத்திய அரசு குழு பரிந்துரை செய்துள்ளது. இதில் பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் பிரபலமான மருந்துகளும் இடம் பெற்றுள்ளன. #MedicineBan
    புதுடெல்லி:

    கடந்த 2016-ம் ஆண்டு மருந்து தொழில் நுட்ப ஆலோசனை குழு பரிந்துரையின்பேரில் 349 வகையான மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

    இதில் சளி, இருமல், நோய் எதிர்ப்பு மருந்துகள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து இந்த மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தன.

    இதை விசாரித்த நீதிபதிகள், “மருந்து தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைத்து 349 மருந்துகள் தடை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

    அதன்படி ஆய்வு செய்து மருத்துவ தொழில்நுட்ப குழு ஏற்கனவே தடை செய்யப்பட்ட 349 வகையான மருந்துகளில் 6 மருந்துகள் தவிர 343 மருந்துகளை தடை செய்யலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. இதில் பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் பிரபலமான மருந்துகளும் இடம் பெற்றுள்ளன.

    இந்த தடை குறித்து அகில இந்திய மருந்து நடவடிக்கை குழு அமைப்பின் இணை அமைப்பாளர் எஸ்.ஸ்ரீனிவாசன், “சட்ட விதிகளின்படி மத்திய அரசின் அனுமதி பெற்ற மருந்துகளை மட்டுமே மாநிலங்களில் தயாரிக்க முடியும்.

    ஆனால் மத்திய அரசின் அனுமதி இல்லாமல், மாநில அரசுகளின் அனுமதி பெற்று தவறான மருந்துகளை உற்பத்தி செய்தனர். இந்த மருந்துகளில் ஒருவகையான கலவை உள்ளது. இதில் பெரும்பாலான மருந்துகள் உடலுக்கு தீமை விளைவிக்கும். பெரும்பாலான நாடுகள் இந்த வகையான மருந்துகளை தயாரிக்க அனுமதிப்பதில்லை. ஆனால் இந்தியாவில் இந்த வகையான 6 ஆயிரத்து 200 மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.

    இவற்றை முறைப்படுத்த 1988-ம் ஆண்டு மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள் மறுசீரமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது. இவற்றில் தீமை விளைவிக்கும் மருந்துகளை தடை செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகின்றன.

    இந்தியாவில் தயாராகும் மொத்த மருந்துகளில் பெரும்பாலானவை குஜராத், மராட்டிய மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மீதமுள்ள மருந்துகள் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாசல பிரதேசங்களில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் தற்போது 343 வகையான மருந்துகளை தடை செய்ய மத்திய அரசின் மருந்து குழு பரிந்துரை செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். #MedicineBan
    Next Story
    ×