என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யூடியூபில் சாதனை படைத்த இந்திய தேசிய கீதப் பாடலின் பியானோ இசை
Byமாலை மலர்14 Aug 2018 4:24 PM IST (Updated: 14 Aug 2018 4:45 PM IST)
இந்திய தேசிய கீதமான 'ஜன கண மன அதிநாயக ஜெய கே!’ என்னும் நாட்டுப்பற்றுப் பாடலின் ‘பியானோ இசை’ யூடியூபில் 15 நாட்களில் 7 கோடி பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளது. #Pianorendition #JanaGanaMana
புதுடெல்லி:
வங்காள மொழி கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய 'ஜன கண மன அதிநாயக ஜெய கே!’ என்னும் நாட்டுப்பற்று பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நடைபெறும் சுதந்திர தினம், குடியரசு விழா மற்றும் முக்கிய அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்துவது வழக்கமாக உள்ளது.
இந்த தேசிய கீதத்தை முறையாக முழுமையாக 52 விநாடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும் என்பது மரபாக இருந்து வருகிறது.
பர்ஹாத் விஜய் அரோரா இயக்கத்தில் உருவான இந்த இசை வீடியோ, கடந்த 29-7-2018 அன்று யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த வீடியோ வெளியான முதல் நாளில் சுமார் 50 லட்சம் மக்கள் இதை பார்த்து, பகிர்ந்ததால் மிக பரவலான வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சுமார் 7 கோடியே 25 லட்சம் மக்களின் பேராதரவுடன் 15 நாட்களில் மாபெரும் சாதனையை இந்த பியானோ இசை உருவாக்கியுள்ளது.
வங்காள மொழி கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய 'ஜன கண மன அதிநாயக ஜெய கே!’ என்னும் நாட்டுப்பற்று பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நடைபெறும் சுதந்திர தினம், குடியரசு விழா மற்றும் முக்கிய அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்துவது வழக்கமாக உள்ளது.
இந்த தேசிய கீதத்தை முறையாக முழுமையாக 52 விநாடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும் என்பது மரபாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டின் இந்திய சுதந்திர திருநாளை முன்னிட்டு மும்பையை சேர்ந்த பிரபல ‘பியானோ’ கலைஞர் ஷயான் இட்டாலியா என்பவர் வெகு நேர்த்தியாகவும், இனிமையாகவும் 'ஜன கண மன' பாடலை வாசித்து தனது நாட்டுப்பற்றை நிலைநாட்டியுள்ளார்.
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி சுமார் 7 கோடியே 25 லட்சம் மக்களின் பேராதரவுடன் 15 நாட்களில் மாபெரும் சாதனையை இந்த பியானோ இசை உருவாக்கியுள்ளது.
யூடியூபில் அதிக பார்வையாளர்களை தேசிய கீதமாக பிரான்ஸ் நாட்டு நாட்டுப்பற்றுப் பாடல் இதற்கு முன்னர் சுமார் 3.6 கோடி பார்வையாளர்களை கவர்ந்திருந்தது. அந்த சாதனையை நமது 'ஜன கண மன அதிநாயக ஜெய கே!’ பியானோ இசை தற்போது முறியடித்துள்ளது, குறிப்பிடத்தக்கது. #Pianorendition #JanaGanaMana #YouTube #Pianorendition
இந்த வீடியோவைக் காண.., https://www.youtube.com/watch?v=YNpqyL3Z_6A
Next Story
×