search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகார் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் - முன்னாள் பெண் மந்திரி, கணவர் மீது வழக்கு
    X

    பீகார் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் - முன்னாள் பெண் மந்திரி, கணவர் மீது வழக்கு

    பீகார் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பெண் மந்திரி மஞ்சு வர்மா, அவரது கணவர் சந்திர சேகர் ஆகியோர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #Muzaffarpurshelterhome #Manjuvarma
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர் பூரில் ஒரு காப்பகத்தில் தங்கியிருந்த 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கற்பழிக்கப்பட்டனர். இது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.



    அதைதொடர்ந்து நடந்த விசாரணையில் பிரஜேஷ் தாக்கூர் என்பவர் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது. அவருக்கு பீகார் சமூக நலத்துறை மஞ்சு வர்மாவும், அவரது கணவர் சந்திரசேகரும் அடைக்கலம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    மேலும் மஞ்சுவர்மாவின் கணவர் சந்திரசேகருடன் பிரஜேஷ் தாக்கூர் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 17 தடவை டெலிபோனில் பேசியதும் உறுதி செய்யப்பட்டது. எனவே மஞ்சுவர்மா மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து சி.பி.ஐ. தனது விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

    இந்தநிலையில் பாட்னாவில் உள்ள மஞ்சுவர்மா, பெகுசாரை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் உள்ள அவரது மருமகன் அர்ஜூன் தோலாவுக்கு சொந்தமான வீடுகள் உள்பட 12 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது மருமகன் அர்ஜூன் தோலா வீட்டில் இருந்து 50 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை பல்வேறு துப்பாக்கிகளுடன் தொடர்புடையவை. இந்த தகவலை செரிய பரியாபூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் ரஜாக் தெரிவித்தார். ஆனால் அவரது மருமகன் பெயரை வெளியிட மறுத்துவிட்டார்.

    இச்சம்பவத்தை தொடர்ந்து முன்னாள் பெண் மந்திரி மஞ்சுவர்மா, அவரது கணவர் சந்திரசேகர் ஆகியோர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் மற்றொரு முன்னாள் சமூகநலத்துறை மந்திரி தாமோதர் ரவாத்திடமும் சி.பி.ஐ. போலீசார் பல மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். இவருக்கும் கற்பழிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி பிரஜேஷ் தாக்கூருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு இருப்பதால் விசாரணை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது அதைதொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தாமோதர் ரவாத்தின் மகன் ராஜிவ் ரவாத் நீக்கப்பட்டார்.  #Muzaffarpurshelterhome #Manjuvarma


    Next Story
    ×