search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் இன்று கனமழை - வெள்ளத்தில் மிதந்த சாலைகள்
    X

    டெல்லியில் இன்று கனமழை - வெள்ளத்தில் மிதந்த சாலைகள்

    தலைநகர் டெல்லியில் இன்று பல்வேறு இடங்களில் பெய்த கனமழையினால், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #DelhiRains
    புதுடெல்லி:

    டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்தது. மலைப்பிரதேசங்களில் பெய்து வரும் மழையினால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சில சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.



    யமுனா பஜார் பகுதியில் உள்ள அனுமன் கோவில் அருகே சென்ற பேருந்து மேற்கொண்டு நகர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தது. பின்னர் சிறிது நேரத்தில் பேருந்து நின்றுவிட்டது. இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்து, பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகளையும் மீட்டனர். சாலைகளில் தேங்கிய மழைநீர், ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்டது.

    இதற்கிடையே டெல்லியில் வானம் தொடர்ந்து மேக மூட்டமாக காணப்படுகிறது. மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. #DelhiRains
    Next Story
    ×