என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் ரெயில்வே நடைமேடையில் குழந்தை பெற்றெடுத்த இளம் கர்ப்பிணி
Byமாலை மலர்1 Sept 2018 10:26 PM IST (Updated: 1 Sept 2018 10:26 PM IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் எக்ஸ்பிரெஸ் ரெயிலில் பிரசவ வலி ஏற்பட்டதால் ரெயில்வே நடைமேடையில் இளம் கர்ப்பிணி ஒருவர் குழந்தை பெற்றெடுத்து உள்ளார்.
மும்பை :
மும்பையில் இருந்து லக்னோ நோக்கி சென்ற புஷ்பக எக்ஸ்பிரெஸ் ரெயிலில் காஞ்சனா தேவி (வயது 27) என்ற கர்ப்பிணி பயணம் செய்துள்ளார். ரெயில் பூசாவல் ரெயில் நிலையத்திற்கு வந்தபொழுது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதனால் வலியால் துடித்த அவருக்கு மற்ற பெண் பயணிகள் உதவிக்கு வந்தனர். அவரை ரெயில் பெட்டியில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். அங்கிருந்த டிக்கெட் பரிசோதகரிடம் இதுபற்றி தெரிவித்து உள்ளனர். அவர் ரெயில்வே மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு உடனடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே லிப்ட் ஒன்றில் கர்ப்பிணியான காஞ்சனாவை ஏற்ற பயணிகள் முயற்சித்து உள்ளனர். எனினும், நடைமேடையிலேயே அவர் குழந்தை பெற்றெடுத்து விட்டார். உள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளம்பெண்ணும், குழந்தையும் நலமுடன் உள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Next Story
×