search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு
    X

    பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு

    தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #pertolprice #petrolexport #Congress
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

    தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 82 ரூபாயையும், ஒரு லிட்டர் டீசல் 75 ரூபாயையும் தாண்டி இருக்கின்றன. விரைவில் இவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இந்திய பண மதிப்பு வீழ்ச்சிதான் காரணம் என கூறப்படுகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாய் என இருந்து வந்த நிலையில் இப்போது 71 ரூபாயை தாண்டி இருக்கிறது. இதுவும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

    தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதாலும், இந்திய பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாலும், அதை எதிர்க்கும் வகையில் பெரிய அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    இது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொருளாளர் அகமது பட்டேல், பொறுப்பாளர் அசோக் கெலாட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

    இந்நிலையில், அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் விவசாயிகள், சிறு வணிகர்கள், நகர மக்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். #pertolprice #petrolexport #Congress
    Next Story
    ×