search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் - அக்‌ஷய்குமார் உள்ளிட்ட 70 பிரபலங்களை களமிறக்கும் பா.ஜ.க.
    X

    பாராளுமன்ற தேர்தல் - அக்‌ஷய்குமார் உள்ளிட்ட 70 பிரபலங்களை களமிறக்கும் பா.ஜ.க.

    நடிகர்கள் அக்‌ஷய்குமார், மோகன்லால் மற்றும் விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்கள் உள்பட 70 பிரபலங்களை பாராளுமன்ற தேர்தலில் களமிறக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. #BJP #AkshayKumar
    புதுடெல்லி:

    2019 பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் வேட்கையில் பா.ஜனதா இருக்கிறது. இதற்காக அந்த கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பிரபல நடிகர், நடிகைகள், விளையாட்டு துறை உள்பட 70 பிரபலங்களை களத்தில் நிறுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. நடிகர்கள் அக்‌ஷய்குமார், மோகன்லால், சன்னிதியோல், மாதிரி தீட்சித், கிரிக்கெட் வீரர் ஷேவாக் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்குகிறது.

    இதுகுறித்து பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

    திரைப்பட துறை, விளையாட்டுத் துறை, கலை மற்றும் பண்பாட்டுத்துறை, ஊடகத்துறை போன்ற துறைகளை சேர்ந்த பலர் தங்களது துறைகளில் பல சாதனைகள் புரிந்து மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ளனர். இதனால் அவர்களுக்கு பல ஆதரவாளர்களும், ரசிகர்களும் உள்ளனர். அவர்களால் கூட்டத்தை திரட்ட முடியும்.

    மேலும் அவர்களால் அரசியலில் மாறுபட்ட சிந்தனைகளையும் தொலைநோக்கு பார்வையும் அளிக்க முடியும் என்று பா.ஜனதா மேலிடம் நம்புகிறது.


    அதன்படி அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு நடிகர்கள் அக்‌ஷய் குமார், சன்னி தியோல், மோகன்லால், நடிகை மாதிரி தீட்சித், கிரிக்கெட் வீரர் ஷேவாக் உள்ளிட்ட 70 பிரபலங்களுக்கு வாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    டெல்லி தொகுதியில் அக்‌ஷய் குமாரும், குருதாஸ்பூர் தொகுதியில் சன்னி தியோலும், மும்பையில் மாதுரி தீட்சித்தும், திருவனந்தபுரத்தில் மோகன்லாலும் போட்டியிட வாய்ப்பு வழங்குவது பற்றி பரிசிலீக்கப்பட்டு வருகிறது.

    பொது வாழ்வில் சாதனைகள் படைத்தவர்களை பா.ஜனதாவுக்குள் கொண்டு வரவேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். அவரது உத்தரவுப்படி பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களை கட்சிக்குள் கொண்டு வருவதற்காக முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

    பா.ஜனதாவை சேர்ந்த பெரும்பாலான எம்.பி.க்களுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். இதனால் அவர்களுக்கு மாற்றாக புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

    புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்குவதால் கட்சியில் உள்ள எம்.பி.க்கள் பலருக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

    இவ்வாறு பா.ஜனதா மூத்த தலைவர் தெரிவித்தார். #BJP #AkshayKumar #Mohanlal
    Next Story
    ×