என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிள் மோதி பஸ் எரிந்து சாம்பல்- வாலிபர் பலி
Byமாலை மலர்25 Sept 2018 4:49 PM IST (Updated: 25 Sept 2018 4:51 PM IST)
கொழிஞ்சாம்பாறை அருகே வாலிபர்கள் காரை முந்திச்செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பஸ் மீது மோதிய விபத்தில் ஒரு வாலிபர் பலியானார்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் மூவாற்றுப்புழாவில் இருந்து நேற்று மாலை அதிவிரைவு அரசு பஸ் 44 பயணிகளுடன் கோட்டயத்துக்கு புறப்பட்டது. பஸ்சை டிரைவர் ராஜூ பேபி ஓட்டினார். கண்டக்டராக டின்சன் இருந்தார். பஸ்சின் கதவு டிரைவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் இருந்தது.பஸ் மாரடி ஏ.சி. ரோட்டில் வந்து கொண்டிருந்தது.
அப்போது கொட்டாரக்கரை நெல்லிக்குளம் பகுதியை சேர்ந்த அனுப் (வயது 18) என்பவர் மற்ற 2 நண்பர்களுடன் தனித்தனி மோட்டார் சைக்கிளில் அதே ரோட்டில் எதிரே வந்தனர். அப்போது எதிரே சென்ற காரை முந்திச்செல்ல நண்பர்களிடையே போட்டி நடந்தது. அதன்படி 2 நண்பர்கள் காரை முந்திச்சென்றனர்.
காரை அனுப் முந்திச்செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அதிவிரைவு பஸ் மீது மோதியது. மோதிய உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். ஆனால் மோட்டார் சைக்கிளுடன் அனுப் பஸ்சுக்கு அடியில் சிக்கினார்.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளில் உரசிய வேகத்தில் தீப்பொறி கிளம்பியது. மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் உடைந்ததால் மோட்டார் சைக்கிள் உடனே தீ பிடித்தது.
மோட்டார் சைக்கிள் வெடித்ததில் பஸ் டீசல் டேங்க் சேதமானது. டீசலும் வெளியே கசிய தொடங்கியது. இதனால் பஸ்சும் தீ பிடித்தது. பஸ்சும், மோட்டார் சைக்கிளும் கொழுந்து விட்டு எரிந்தது.
தகவல் அறிந்ததும் கோட்டயம், மூவாற்றுப்புழா தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் வாகனத்தில் விரைந்து வந்தனர். கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். எனினும் பஸ், மோட்டார் சைக்கிள் எரிந்து எலும்பு கூடானது.
இந்நிலையில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அனுப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சமயோசிதமாக செயல்பட்ட பஸ் டிரைவர் ராஜூ பேபி, கண்டக்டர் டின்சன் ஆகியோர் 44 பயணிகளை காப்பாற்றியது அதிகாரிகள் மற்றும் பயணிகள் பாராட்டினர். #tamilnews
கேரள மாநிலம் மூவாற்றுப்புழாவில் இருந்து நேற்று மாலை அதிவிரைவு அரசு பஸ் 44 பயணிகளுடன் கோட்டயத்துக்கு புறப்பட்டது. பஸ்சை டிரைவர் ராஜூ பேபி ஓட்டினார். கண்டக்டராக டின்சன் இருந்தார். பஸ்சின் கதவு டிரைவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் இருந்தது.பஸ் மாரடி ஏ.சி. ரோட்டில் வந்து கொண்டிருந்தது.
அப்போது கொட்டாரக்கரை நெல்லிக்குளம் பகுதியை சேர்ந்த அனுப் (வயது 18) என்பவர் மற்ற 2 நண்பர்களுடன் தனித்தனி மோட்டார் சைக்கிளில் அதே ரோட்டில் எதிரே வந்தனர். அப்போது எதிரே சென்ற காரை முந்திச்செல்ல நண்பர்களிடையே போட்டி நடந்தது. அதன்படி 2 நண்பர்கள் காரை முந்திச்சென்றனர்.
காரை அனுப் முந்திச்செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அதிவிரைவு பஸ் மீது மோதியது. மோதிய உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். ஆனால் மோட்டார் சைக்கிளுடன் அனுப் பஸ்சுக்கு அடியில் சிக்கினார்.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளில் உரசிய வேகத்தில் தீப்பொறி கிளம்பியது. மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் உடைந்ததால் மோட்டார் சைக்கிள் உடனே தீ பிடித்தது.
பஸ்சை விட்டு இறங்கிய டிரைவர், கண்டக்டர் இதனை கவனித்தனர். உடனே பஸ்சுக்குள் ஏறிய அவர்கள் சமயோசிதமாக செயல்பட்டனர். கதவை உடனே திறந்து விட்டனர். கண்டக்டர் அனைவரையும் வெளியேற்றினார். பின்னர் பஸ்சுக்கு அடியில் சிக்கிய அனுப்பை பயணிகளும், பஸ் ஊழியர்களும் மீட்டனர். அடுத்த வினாடியே மோட்டார் சைக்கிளின் பெட்டோல் டேங்க் வெடித்து சிதறியது. இதனால் குபீரென தீ கிளம்பியது.
பயணிகளை காப்பாற்றிய டிரைவர் ராஜூ பேபி, கண்டக்டர் டின்சன்
தகவல் அறிந்ததும் கோட்டயம், மூவாற்றுப்புழா தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் வாகனத்தில் விரைந்து வந்தனர். கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். எனினும் பஸ், மோட்டார் சைக்கிள் எரிந்து எலும்பு கூடானது.
இந்நிலையில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அனுப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சமயோசிதமாக செயல்பட்ட பஸ் டிரைவர் ராஜூ பேபி, கண்டக்டர் டின்சன் ஆகியோர் 44 பயணிகளை காப்பாற்றியது அதிகாரிகள் மற்றும் பயணிகள் பாராட்டினர். #tamilnews
Next Story
×