search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம் - பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
    X

    பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம் - பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

    குஜராத் மாநிலத்துக்கு நாளை வருகைதரும் பிரதமர் நரேந்திர மோடி, அமுல் நிறுவனத்தின் அதிநவீன சாக்லேட் தொழிற்சாலையை திறப்பதுடன் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். #PMModinaugurate #projectsinGujarat #Amulchocolateplant
    அகமதாபாத்:

    பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்த இடமான குஜராத் மாநிலத்துக்கு நாளை வருகிறார். இங்குள்ள ஆனந்த் மாவட்டத்தில் உள்ள அமுல் பால் பண்ணை நிறுவனத்துக்கு சொந்தமான வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சாக்லேட் தொழிற்சாலையை அவர் திறந்து வைக்கிறார்.

    மேலும் ஆனந்த் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உணவு பதடுத்தும் பயிற்சி நிலையத்தை தொடங்கி வைக்கும் அவர், முஜ்குவா கிராமத்தில் சூரிய மின்சக்தி கூட்டுறவு நிறுவனத்தையும் திறந்து வைக்கிறார்.

    அமுல் பால் பண்ணையின் விரிவாக்கமாக ஆனந்த், கட்ராஜ் பகுதிகளில் இரண்டு கிளைகளுக்கான அடிக்கல்லை நாட்டும் மோடி, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

    பின்னர், கச் மாவட்டத்தில் உள்ள அன்ஜார் நகரில் முன்ட்ரா இயற்கை எரிவாயு முனையம், அன்ஜார்-  முன்ட்ரா எரிவாயு குழாய் திட்டம், பலன்பூர்-பாலி-பார்மர் எரிவாயு குழாய் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைக்கிறார்.

    அங்கிருந்து ராஜ்கோட் மாவட்டத்துக்கு செல்லும் பிரதமர்,  ஆல்பிரட்  உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.

    குஜராத் மாநில அரசின் பொது வீட்டு வசதி திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள 240 வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வார் என பிரதமரின் சுற்றுப்பயணம் தொடர்பான நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PMModinaugurate #projectsinGujarat  #Amulchocolateplant
    Next Story
    ×