search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி அருகே காரில் செம்மரம் கடத்திய என்ஜினீயரிங் வாலிபர் கைது
    X

    திருப்பதி அருகே காரில் செம்மரம் கடத்திய என்ஜினீயரிங் வாலிபர் கைது

    திருப்பதி அருகே காரில் செம்மரம் கடத்திய என்ஜினீயரிங் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #RedSandersSmuggling #arrest

    திருமலை:

    திருப்பதி அடுத்த ரேணிகுண்டா கரக்கம்பாடி வனப்பகுதியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வனப் பகுதியில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரின் பதிவு எண் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த காரின் பதிவு எண்ணை இணையதளத்தில் பார்த்த போது அது ஒரு பைக்கின் எண்ணாக இருந்தது.

    இதையடுத்து போலீசாரை கண்ட கார்டிரைவர் காரை வனப்பகுதியில் இருந்து ரோட்டிற்கு ஓட்டி வந்தார். போலீசார் அந்த காரை மடக்கி பிடிக்க முயன்ற போது காரில் இருந்து ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.


    கார் டிரைவர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் வேலூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தை சேர்ந்த பாண்டியன் மகன் மேகநாதன் (27) என்பதும், இவர் என்ஜினீயரிங் கல்லூரியில் ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்ததாகவும் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலூரை சேர்ந்த ‌ஷமீது என்பவரிடம் வேலை செய்து வருவதாக கூறி உள்ளார்.

    மேலும் இந்த காரை திருப்பதியில் உள்ள சதீஷ் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு வந்தால் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியதால் காரை ஓட்டி வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து தப்பிஓடிய சதிசை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் காரையும் காரில் கடத்திய 4 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர். #RedSandersSmuggling #arrest

    Next Story
    ×