search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரங்கு கையில் பஸ் ஸ்டீயரிங் - கர்நாடக மாநிலத்தில் பஸ் டிரைவர் சஸ்பெண்ட்
    X

    குரங்கு கையில் பஸ் ஸ்டீயரிங் - கர்நாடக மாநிலத்தில் பஸ் டிரைவர் சஸ்பெண்ட்

    கர்நாடக மாநிலத்தில் ஓடும் பஸ்சின் ஸ்டீயரிங்கை குரங்கின் கையில் ஒப்படைத்து பல உயிர்களுக்கு ஆபத்தான முறையில் செயல்பட்டதற்காக அரசு பஸ் டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். #KSRTCbusdriver #Suspended
    பெங்களூரு:

    கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான பேருந்து பயணிகளுடன் தவனகேரே மாவட்ட சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது ஸ்டீயரிங் வீலில் ஒரு குரங்கு அமர்ந்துகொண்டு வாகனத்தை இயக்குவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக சமீபத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.



    தவனகேரேவில் இருந்து பரமசாகரா நோக்கி செல்லும் அந்த பேருந்தில் வழக்கமாக பயணம் செய்யும் ஒரு ஆசிரியருடன் வந்த அந்த குரங்கு கடந்த முதல் தேதியன்று திடீரென்று ஸ்டீயரிங் மீது ஏறி அமர்ந்து கொண்டதாகவும், அதை விரட்ட முயற்சிக்காத டிரைவர் குரங்குடன் சேர்ந்து ஸ்டீயரிங்கை இயக்கி வாகனத்தை ஓட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், அந்த பேருந்தில் பயணித்தவர்களின் உயிருக்கு ஆபத்தான முறையில் செயல்பட்டதற்காக அந்த பஸ் டிரைவர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். #KSRTCbusdriver #Suspended
    Next Story
    ×