search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
    X

    தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

    தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை மற்றும் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #RedAlert #RedAlertWithdrawn #TNRains #IMD
    புதுடெல்லி:

    அரபிக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறும் என்பதால், தமிழகம் கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கட்டப்பது. இதையடுத்து தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் இருப்பதால், நாளை அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என குறிப்பிட்டு இருந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் 9-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. #RedAlert #RedAlertWithdrawn #TNRains #IMD
    Next Story
    ×