search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவுக்கு எதிராக பேரணி- சந்திரபாபுநாயுடுவுக்கு மம்தாபானர்ஜி அழைப்பு
    X

    பா.ஜனதாவுக்கு எதிராக பேரணி- சந்திரபாபுநாயுடுவுக்கு மம்தாபானர்ஜி அழைப்பு

    வருகிற ஜனவரி 19-ந்தேதி கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக நடைபெற உள்ள மிகப் பிரமாண்டமான பேரணியில் பங்கேற்குமாறு சந்திரபாபுநாயுடுவுக்கு மம்தாபானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். #BJP #ChandrababuNaidu #MamataBanerjee
    கொல்கத்தா:

    பாராளுமன்றத்துக்கு வருகிற 2019-ம் ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணி அமைக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    வருகிற ஜனவரி 19-ந்தேதி மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக மிகப் பிரமாண்டமான பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். அதில் பங்கேற்குமாறு பா.ஜனதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆந்திர பிரதேச முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபுநாயுடுவுக்கு கடிதம் அனுப்பினார். அதை ஏற்றுக்கொண்ட அவர் பேரணியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில் ஆந்திராவில் இருந்து பிரிந்து புதிய மாநிலமாக உருவான தெலுங்கானாவின் முதல்-மந்திரி கே.சந்திரசேகரராவுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு கடிதம் அனுப்பவில்லை. சில மாதங்களுக்கு முன்பு பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் சந்திரசேகர ராவ் கடுமையாக எதிர்த்தார்.

    தேசிய அளவில் பா.ஜனதா மற்றும் காங்கிரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த முன்னணியை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொண்டார். கொல்கத்தா சென்று மம்தாபானர்ஜியை சந்தித்து அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. பிரதமர் மோடியுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். காங்கிரசை கடுமையாக எதிர்க்க தொடங்கினார்.

    அதையடுத்து பா.ஜனதாவுடன், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைக்க போவதாக செய்திகள் பரவின. ஆனால் அதை 2 கட்சிகளும் மறுத்தன. ஆனால் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் பிரிந்த பிறகு சந்திரபாபுநாயுடு பா.ஜனதாவையும், மோடியையும் கடுமையாக எதிர்த்து வருகிறார். எனவே இவருக்கு மம்தாபானர்ஜி அழைப்பு விடுத்தார். தெலுங்கு ராஷ்டீரிய சமிதி கட்சிக்கும், அதன் தலைவர் சந்திரசேகர ராவுக்கும் அழைப்பு விடுக்கவில்லை என தெரிகிறது. #BJP #ChandrababuNaidu #MamataBanerjee
    Next Story
    ×