என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 பேர் கைது- ஆயுதங்கள் சிக்கின
Byமாலை மலர்26 Nov 2018 6:56 AM IST (Updated: 26 Nov 2018 6:56 AM IST)
காஷ்மீரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் டெல்லியில் தாக்குதல் நடத்த சதி செய்தது அம்பலமானது. #isterroristarrested
புதுடெல்லி:
பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 7 பேர் பஞ்சாப் மாநிலத்தில் தாக்குதல் நடத்துவதற்காக ஊடுருவி உள்ளதாக உளவுத்தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து பஞ்சாப் போலீசார், முழு உஷார் நிலை அறிவித்தனர்.
அதற்கு மத்தியிலும், அங்கு அமிர்தசரஸ் நகர பகுதியில் மத வழிபாட்டு தலம் ஒன்றில் 200-க்கும் மேற்பட்டோர் கூடி இருந்தபோது கடந்த 18-ந் தேதி பயங்கரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். இது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இப்போது தலைநகர் டெல்லியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் ஊடுருவி இருக்கலாம் என்று போலீசார் உஷார்படுத்தினர். அவர்களது படங்களையும் வெளியிட்டனர்.
அத்துடன் டெல்லி மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் கண்காணிப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்கான சதித்திட்டத்துடன் காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரையொட்டி உள்ள கோதிபாக் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் டெல்லி சிறப்பு போலீஸ் படையினரும், காஷ்மீர் போலீஸ் படையினரும் நேற்று காலையில் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.
அதில் அங்குள்ள சுற்றுலா தகவல் நிலையம் அருகே 3 பேர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் நின்று கொண்டிருந்தபோது, அவர்களை டெல்லி, காஷ்மீர் போலீஸ் படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்கள் உலகையே அச்சுறுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்களிடம் நடத்திய சோதனையில் கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகள் சிக்கின. அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. #isterroristarrested
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X