search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமரையும் தூக்கத்தில் இருந்து எழ வைப்போம் - விவசாய கடன் தள்ளுபடி பற்றி ராகுல் காந்தி கருத்து
    X

    பிரதமரையும் தூக்கத்தில் இருந்து எழ வைப்போம் - விவசாய கடன் தள்ளுபடி பற்றி ராகுல் காந்தி கருத்து

    விவசாய கடன்களை தள்ளுபடி செய்த அசாம் மற்றும் குஜராத் முதல்-மந்திரிகளை தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டோம், அதுபோல், பிரதமரையும் தூக்கத்தில் இருந்து எழ வைப்போம் என்று ராகுல் காந்தி கூறினார். #RahulGandhi #Modi
    புதுடெல்லி:

    மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அரசுகள் சமீபத்தில் பதவி ஏற்றன. அடுத்த சில மணி நேரங்களில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அம்மாநிலங்களின் முதல்-மந்திரிகள் அறிவித்தனர். அதுபோல், நாடு முழுவதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

    இதற்கிடையே, பா.ஜனதா ஆளும் குஜராத், அசாம் ஆகிய மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் விவசாயிகளுக்கு ஆறுதல் தரும் அறிவிப்புகளை வெளியிட்டனர்.



    ரூ.600 கோடி விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பை அசாம் மாநில முதல்-மந்திரி வெளியிட்டார். கிராமப்புற மக்களின் ரூ.625 கோடி மின்கட்டண பாக்கியை தள்ளுபடி செய்து குஜராத் முதல்-மந்திரி அறிவித்தார்.

    பா.ஜனதா அரசுகளின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    குஜராத், அசாம் மாநிலங்களின் முதல்-மந்திரிகளை காங்கிரஸ் கட்சி, தூக்கத்தில் இருந்து எழ வைத்து விட்டது. ஆனால், பிரதமர் இன்னும் ஆழ்ந்த தூக்கத்தில்தான் இருக்கிறார். அவரையும் எழ வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RahulGandhi #Modi 
    Next Story
    ×