search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரானவரல்ல - பிரகாஷ்ராஜ் கருத்து
    X

    ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரானவரல்ல - பிரகாஷ்ராஜ் கருத்து

    மத்திய மந்திரி நிர்மலா சீதாரமன் விவகாரத்தில் ராகுல் காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அவர் பெண்களுக்கு எதிரானவரல்ல என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். #RahulGandhi #PrakashRaj
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமானம் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்துக்கு வந்து பதிலளிக்காமல் ஒரு பெண்ணின் (ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்) பின்னால் மறைந்துகொண்டு அவரை பதிலளிக்க வைத்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று குறிப்பிட்டிருந்தார்.

    இவ்விவகாரம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை பாலின பாகுபாடாக 'பெண்' என்று பிரித்துப் பேசிய ராகுல் காந்திக்கு மகளிர் தேசிய மகளிர் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியது.

    இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூரு மேற்கு தொகுதியில் போட்டியிடப் போவதாக சமீபத்தில் அறிவித்த நடிகர் பிரகாஷ்ராஜ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


    இந்த சந்திப்புக்கு பின்னர் பிரகாஷ்ராஜை சந்தித்த டெல்லி பத்திரிகையாளர்கள், நிர்மலா சீதாராமன் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ், ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரானவரல்ல என்று தெரிவித்தார்.

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய பொறுப்பில் (தேசிய பொதுச்செயலாளராக) ஒரு திருநங்கையை (அப்சரா ரெட்டி) நியமித்த அவரை பெண்களுக்கு எதிரானவர் என்று கூற முடியாது.

    ராகுல் கூறிய கருத்தை பெண்களுக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தில் மட்டும் நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்?. பிரதமர் பாராளுமன்றத்துக்கு வரவில்லை, பதிலளிக்கவில்லை என்பது உண்மைதானே. அவர் கூறியதில் நாம் இதையும் இணைத்துப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார். #RahulGandhi #PrakashRaj
    Next Story
    ×