என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நோயாளியுடனான சந்திப்பை அரசியல் ஆதாயமாக்குவதா? - ராகுலுக்கு மனோகர் பரிக்கர் கண்டனம்
Byமாலை மலர்30 Jan 2019 6:40 PM IST (Updated: 30 Jan 2019 6:40 PM IST)
ரபேல் விவகாரம் தொடர்பாக மனோகர் பரிக்கர் தன்னிடம் தெளிவான விளக்கம் அளித்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து மனோகர் பரிக்கர் கடிதம் எழுதியுள்ளார். #politicalopportunism #Parrikar #Rahul
புதுடெல்லி:
ரபேல் போர் விமானம் கொள்முதல் பேரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தனது நண்பரான அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆதாயம் தேடித்தந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார்.
சமீபத்தில் ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தியுடன் தனிப்பட்ட பயணமாக ஓய்வுக்காக கோவா சென்றிருந்தார். ரபேல் ஒப்பந்தத்தின்போது ராணுவ மந்திரியாக முன்னர் பொறுப்பு வகித்து தற்போது கோவா முதல் மந்திரியாக பதவி வகிக்கும் மனோகர் பரிக்கர் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கோவா சென்றிருந்த ராகுல் காந்தி நேற்று திடீரென்று மனோகர் பரிக்கரை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘ரபேல் போர் விமானம் கொள்முதல் செய்வது தொடர்பான புதிய ஒப்பந்தத்தில் தனக்கு எந்த பங்கும் இல்லை. அனில் அம்பானிக்கு ஆதாயம் தேடித்தரும் வகையில் எல்லாவற்றையும் பிரதமர் மோடிதான் நடத்தினார் என்று முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பரிக்கர் தெளிவாக தெரிவித்து விட்டார்’ என்று கூறினார்.
ராகுல் காந்தியின் இந்த சர்ச்சைப் பேச்சு பா.ஜ.க. வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஒரு நோயாளியான என்னை சந்தித்துவிட்டுச் சென்றதை மலிவான அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துவதா? என ராகுல் காந்திக்கு மனோகர் பரிக்கர் மன வருத்தத்துடன் இன்று கடிதம் எழுதியுள்ளார்.
‘எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் என்னை சந்திக்க விரும்புவதாக நீங்கள் கேட்டுக் கொண்டீர்கள். நானும் உங்கள் விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்தேன். நம் இருவருக்கும் இடையில் வெறும் ஐந்து நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது ரபேல் ஒப்பந்தம் பற்றி நீங்களும் பேசவில்லை, நானும் எதுவும் கூறவில்லை. இதுதொடர்பாக நாம் இருவரும் எதுவுமே பேசவில்லை.
உண்மை நிலை இவ்வாறிருக்க மிக மலிவான அரசியல் ஆதாயத்துக்காக நீங்கள் என்னைப்பற்றி தெரிவித்த கருத்தை அறிந்து மிகுந்த வேதனைப்படுகிறேன்’ என தனது கடிதத்தில் மனோகர் பரிக்கர் குறிப்பிட்டுள்ளார். #politicalopportunism #Parrikar #Rahul
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X