என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடி அரசியலை விட்டு விலகினால் நானும் வெளியேறி விடுவேன் - ஸ்மிரிதி இரானி
Byமாலை மலர்4 Feb 2019 1:08 PM IST (Updated: 4 Feb 2019 1:08 PM IST)
பிரதமர் மோடி அரசியலை விட்டு விலகிவிட்டால் நானும் இந்திய அரசியலில் இருக்க மாட்டேன் என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார். #SmritiIrani #PMModi
புனே:
மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி புனேவில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பார்வையாளர்கள் கேட்ட கேள்விக்கு ஸ்மிரிதி இரானி பதில் அளித்து பேசியதாவது:
நான் அரசியலுக்கு வருவேன் என்றோ, இவ்வளவு பெரிய பணிகளில் ஈடுபடுவேன் என்றோ ஒருபோதும் நினைத்தது இல்லை. புகழ்பெற்ற தலைவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவர் அரசியலை விட்டு விலகிவிட்டால் நானும் இந்திய அரசியலில் இருக்க மாட்டேன். நான் எனது வாழ்க்கையை நாட்டுக்காக இந்த சமூகத்துகாக ஒப்படைத்திருக்கிறேன்.
அமேதி தொகுதியில் கடந்த முறை நான் போட்டியிட்டபோது யார் இந்த ஸ்மிரிதி இரானி என்று கேட்டார்கள். ஆனால் இப்போது நான் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்துள்ளது.
கட்சியும், கட்சித்தலைவர் அமித் ஷாவும் முடிவெடுத்தால் மீண்டும் நான் அமேதி தொகுதியில் போட்டியிடுவேன். பெண்கள் அரசியலில் காலூன்றுவது என்பது கடினமான விஷயம். மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், தற்போதைய சபாநாயகர் சுமித்ரா மகாஜன் போன்றவர்கள் எனக்கு உந்துசக்தியாக இருந்தவர்கள். அவர்களின் வழியில் நானும் பயணித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #SmritiIrani #PMModi

ஏற்கனவே மாபெரும் தலைவர் வாஜ்பாயுடன் பணியாற்றினேன். தற்போது பிரதமர் மோடியுடன் பணியாற்றுகிறேன். பிரதமர் மோடி நீண்ட காலம் அரசியலில் இருப்பார்.
அவர் அரசியலை விட்டு விலகிவிட்டால் நானும் இந்திய அரசியலில் இருக்க மாட்டேன். நான் எனது வாழ்க்கையை நாட்டுக்காக இந்த சமூகத்துகாக ஒப்படைத்திருக்கிறேன்.
அமேதி தொகுதியில் கடந்த முறை நான் போட்டியிட்டபோது யார் இந்த ஸ்மிரிதி இரானி என்று கேட்டார்கள். ஆனால் இப்போது நான் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்துள்ளது.
கட்சியும், கட்சித்தலைவர் அமித் ஷாவும் முடிவெடுத்தால் மீண்டும் நான் அமேதி தொகுதியில் போட்டியிடுவேன். பெண்கள் அரசியலில் காலூன்றுவது என்பது கடினமான விஷயம். மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், தற்போதைய சபாநாயகர் சுமித்ரா மகாஜன் போன்றவர்கள் எனக்கு உந்துசக்தியாக இருந்தவர்கள். அவர்களின் வழியில் நானும் பயணித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #SmritiIrani #PMModi
Next Story
×