என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் ஷாப்பிங் மாலில் புகுந்த சிறுத்தை
Byமாலை மலர்20 Feb 2019 4:17 PM IST (Updated: 20 Feb 2019 4:17 PM IST)
மகாராஷ்டிராவில் உள்ள ஷாப்பிங் மால் வளாகத்தில் புகுந்த சிறுத்தையை நீண்ட தேடுதலுக்கு பிறகு வனத்துறையினர் பிடித்துள்ளனர். #LeopardCaughtatHotel
தானே:
மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் சமதா நகரில், அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் வணிக வளாகமான கோரம் மாலில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஒரு சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. அப்பகுதியில் இருந்த சிலர் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் மற்றும் வனத்துறையினர் அந்த மாலுக்கு விரைந்தனர். சிறுத்தையை 3 மணி நேரம் வரை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அங்கிருந்த சுற்றுச்சுவரில் ஏறி குதித்து தப்பித்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்பின்னர் அந்த சிறுத்தை, ஷாப்பிங் மாலுக்கு அருகில் இருந்த ஹோட்டல் வளாகத்தில் உலவியது சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், தீவிர முயற்சிக்குப் பிறகு காலை 11.50 மணி அளவில் சிறுத்தையை பிடித்தனர்.
பிடிபட்ட சிறுத்தை சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #LeopardCaughtatHotel

Next Story
×