search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பப்ஜி கேம் விளையாடிய 2 பேர் ரெயிலில் அடிபட்டு பலி
    X

    பப்ஜி கேம் விளையாடிய 2 பேர் ரெயிலில் அடிபட்டு பலி

    மகாராஷ்டிராவில் ரெயில்வே தண்டவாளத்தின் அருகே பப்ஜி கேமை தீவிரமாக விளையாடியபோது, 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #PUBGgame
    மும்பை:

    உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள மக்கள் ஆன்லைன் கேமிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இந்த ஆன்லைன் கேம்கள் பெரியவர்கள் , சிறியவர்கள் என அனைத்து வயதினரையும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் அடிமையாக்கியும் உள்ளது.

    இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள ஹிங்கோலி பகுதியில்  கடந்த சனிக்கிழமை அன்று, ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகே நாகேஷ் கோர்(24), சுவப்னில் அன்னப்பூர்ணே(22) ஆகியோர் பப்ஜி கேம் விளையாடியுள்ளனர். அப்போது  ஐதராபாத்தில் இருந்து அஜ்மீர் செல்லும் ரெயில் வந்துள்ளது. இதனை கவனிக்காமல் தொடர்ந்து விளையாட்டில் தீவிரம் காட்டியுள்ளனர்.  இதனால் ரெயிலில் அடிபட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.



    இவர்களது சடலங்களை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நள்ளிரவு கண்டறிந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  

    பப்ஜி என்பது மிகவும் ஆபத்தான ஆன்லைன் மல்டிபிளேயர் கேம் ஆகும். இதில் 100 வீரர்கள் போர்க்களத்தில் போராட வேண்டும். இதில், ஒருவர், இருவர், நால்வர் என எண்ணிக்கையில் அணி அணியாக சேர்ந்து விளையாடலாம். இறுதியாக உயிர்தப்புபவர் வெற்றி பெறுவார்.

    மும்பையில் வாலிபர் ஒருவர் பப்ஜி விளையாடுவதற்கு செல்போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால், தற்கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #PUBGgame 
    Next Story
    ×