search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக ஆட்சியில் விண்வெளியிலும் காவலாளியை நியமித்திருக்கிறோம் - மோடி பெருமிதம்
    X

    பாஜக ஆட்சியில் விண்வெளியிலும் காவலாளியை நியமித்திருக்கிறோம் - மோடி பெருமிதம்

    பாஜக ஆட்சியில் விண்வெளியிலும் காவலாளியை நியமித்திருப்பதாக ஒடிசாவில் நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Governmentmeasures #chowkidarinspace #ModiinOdisha
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநில சட்டசபைக்கு உட்பட்ட 147 தொகுதிகள் மற்றும் அங்குள்ள 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 11, 18, 23, 29 தேதிகளில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இம்மாநிலத்தில் உள்ள கோராபுட் மாவட்டத்துக்குட்பட்ட ஜேய்போர் பகுதியில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து ஆதரவு திரட்டினார்.

    இந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது:-

    முன்னர் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு நினைத்திருந்தால் ஒடிசா மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கும். ஆனால், அதற்கான அக்கறையை முந்தைய ஆட்சியாளர்கள் காட்டவில்லை.



    மத்தியில் எங்கள் ஆட்சி அமைந்த பின்னர் ஒடிசா மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். 8 லட்சம் மக்களுக்கி வீடுகளை கட்டித் தந்திருக்கிறோம். 40 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது.

    இளைஞர்கள் மற்றும் ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக எங்கள் அரசு பாடுபடுகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி அமைந்தால் ஒடிசா இரட்டை வளர்ச்சியை பெறும். இங்குள்ள பழங்குடியினர், விவசாயிகள், இளைஞர்களுக்கு தேவையான வருமானம் கிடைத்தால் மட்டுமே வலிமையுள்ள மாநிலமாக ஒடிசா மாற முடியும்.

    மக்களின் ஆதரவு இல்லாமல் எங்களால் எந்த முன்னேற்ற திட்டத்தையும் முன்னெடுத்து செல்ல முடியாது. பலசோர் பகுதிக்குள் புகுந்து நமது படைகள் நடத்திய தாக்குதலுக்கு நம் நாட்டில் இருக்கும் பலர் ஆதாரம் கேட்கிறார்கள். சமீபத்தில் வானில் செயற்கைக்கோளை தாக்கி அழித்ததன் மூலமாக விண்வெளியிலும் எங்கள் ஆட்சியில் காவலாளியை நியமித்திருக்கிறோம். இதையும் சிலர் சர்ச்சைக்குள்ளாக்கி வருகிறார்கள்.

    இவற்றை எல்லாம் நாம் சகித்துக்கொள்ள வேண்டுமா? நமது படைகளின் வீரத்தையும், விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையும் இழிவாக பேசும் இவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.

    வெற்று கோஷங்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் வேண்டுமா? அல்லது, துணிச்சலான முடிவெடுத்து தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம் வேண்டுமா? என்பதை யோசித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Governmentmeasures #chowkidarinspace #ModiinOdisha
    Next Story
    ×