என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்நாட்டில் போட்டியிட மோடிக்கு துணிச்சல் உண்டா? - மத்திய முன்னாள் மந்திரி சவால்
Byமாலை மலர்7 April 2019 4:23 PM IST (Updated: 7 April 2019 4:23 PM IST)
ராகுல் காந்தியைப் போல் கேரளா அல்லது தமிழ்நாட்டில் போட்டியிட பிரதமர் மோடிக்கு துணிச்சல் உண்டா? என மத்திய முன்னாள் மந்திரி சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். #Moditofight #LSpolls #ShashiTharoor
புதுடெல்லி:
உத்தரபிரதேசம் மாநிலம், அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூடுதலாக கேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிடுவார் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார். இரு வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து, தேர்தல் பிரசாரமும் சூடு பிடித்துள்ளது.
இதற்கிடையில், பெரும்பான்மை இனத்தவர்கள் அதிகம் வாழும் பகுதியில் போட்டியிட பயந்து ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு ஓட்டம் பிடித்ததாக பாஜகவினர் கூறி வருகின்றனர். இதே கருத்தை பிரதமர் மோடியும் ஒரு பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்தது ஏன்? என்பது தொடர்பாக பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய முன்னாள் மந்திரி சசி தரூர், பிரதமர் மோடிக்கும் துணிச்சல் இருந்தால் ராகுல் காந்தியைப்போல் கேரளாவில் அல்லது தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும். இதற்கான துணிச்சல் அவருக்கு உண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டன. அதனால், நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் பாலமாக விளங்க வேண்டும் என்பதற்காகவே வயநாடு பாராளுமன்ற தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்துள்ளார்.
இந்தியாவின் பிரதமர் என்ற பதவி, இந்திய மக்கள் அனைவருக்குமே பொதுவான பதவி என்பதை மறந்துவிட்ட மோடி, பாஜகவின் கொள்கைகளை மட்டுமே உயர்த்திப் பிடிப்பதில் அக்கறை காட்டி வந்துள்ளார்.
இப்போது, ராகுல் காந்தியின் வருகையால் நமது நாட்டின் பிரதமர் தென்னிந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்படவுள்ளார் என்ற ஆர்வம் இங்குள்ள வாக்காளர்கள் மத்தியிலும் அண்டை மாநில மக்களிடையிலும் அதிகரித்துள்ளது எனவும் சசி தரூர் தெரிவித்தார். #Moditofight #LSpolls #ShashiTharoor
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X