என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊழல் பற்றி என்னுடன் விவாதிக்க மோடி அஞ்சுவது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி
Byமாலை மலர்9 April 2019 4:19 PM IST (Updated: 9 April 2019 4:53 PM IST)
ரபேல் ஊழல், நிரவ் மோடியின் வங்கி ஊழல் உள்ளிட்ட விவரங்கள் குறித்து என்னுடன் நேரடியாக விவாதிக்க பிரதமர் மோடி ஏன் தொடர்ந்து மறுத்து வருகிறார் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். #PMModi #RahulGandhi
புது டெல்லி:
பாராளுமன்ற தேர்தலையொட்டி நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், முக்கிய அரசியல் தலைவர்களும் பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு போன்ற களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேப்போல் தொழில்நுட்பத்தின் உதவி கொண்டும், தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி, 'அன்புள்ள பிரதமர் அவர்களே, ஊழல் குறித்து என்னுடன் விவாதிக்க அஞ்சுகிறீர்களா? நான் உங்களுக்கு எளிதான வழியை கூறுகிறேன். ரபேல்+ அனில் அம்பானி, நிரவ் மோடி, அமித் ஷா+ பணமதிப்பிழப்பு ஆகியவை குறித்து விவாதிப்பதற்கு உங்களை நன்கு தயார்படுத்திக்கொள்ளுங்கள்' என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையினை வெளியிட்ட பின்னர், நாட்டின் பாதுகாப்பு, ஊழல் மற்றும் வெளிநாட்டு கொள்கை ஆகியவை குறித்து விவாதம் செய்ய பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால் விடுத்திருந்தார். மேலும் மோடியின் உதவியுடன் தான், அனில் அம்பானி ரபேல் ஊழலில் ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டினார் என ஏற்கனவே ராகுல் காந்தி குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. #PMModi #RahulGandhi

Next Story
×