என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டம் ஜூன் 1ல் நடக்கிறது
Byமாலை மலர்29 May 2019 9:30 PM IST (Updated: 29 May 2019 9:30 PM IST)
காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற கட்சி தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் ஜூன் 1ம் தேதி கட்சியின் எம்பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு முதல் கூட்டத் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற கட்சி தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில், பாராளுமன்ற கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி, தலைவர் பதவியில் இருந்து விலக விரும்புகிறார். எனினும், அவர் மக்களவையில் கட்சியை தலைமை தாங்கி வழிநடத்த தயங்கவில்லை என்பதால், அவர் மக்களவை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×