என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுத்தியால் தாக்கப்பட்ட காண்டிராக்டர் நேசமணி -இந்திய டிரெண்ட்டில் இவர்தான் டாப்
Byமாலை மலர்30 May 2019 9:46 AM IST (Updated: 30 May 2019 9:46 AM IST)
இந்திய டிரெண்ட்டில் டாப்பில் இருக்கும் சுத்தியால் தாக்கப்பட்ட காண்டிராக்டர் நேசமணி யார் என்பதை பார்ப்போம்.
பாகிஸ்தானின் கட்டுமான நிறுவனம் ஒன்று, சுத்தியல் ஒன்றின் படத்தினை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இதற்கு தமிழில் பெயர் என்ன? என கேட்டிருந்தது.
இதற்கு குறும்புக்கார நெட்டிசன் ஒருவர் பதில் அளிக்கையில், 'இதன் பெயர் சுத்தியல். இது விழுந்தால் டாங், டாங் என சத்தம் கேட்கும். இது காண்டிராக்டர் நேசமணியின் தலையில் விழுந்ததால், அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்' என கூறியிருக்கிறார்.
அவரை தொடர்ந்து மற்ற நெட்டிசன்களும் தொடர்ந்து பதிலளிக்கவே ஒரு கட்டத்தில், '#Pray_for_Nesamani' எனும் ஹேஷ்டாக்கினை உருவாக்கி அதனை பரப்ப ஆரம்பித்தனர். இதுதான் இன்றைய டாப் டிரெண்டிங். இந்த நேசமணி யார்? 10 வருடங்களுக்கு முன் ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்த நம்ம வைகைபுயல் வடிவேலுதான்.
நடிகர் சூர்யாவிடம் வேலை சொல்லும்போது, ரமேஷ் கண்ணா மாடியில் ஆணியை கழற்றிக் கொண்டிருப்பார்.அப்போது கை தவறி சுத்தியலை நேசமணி (வடிவேலு) தலையில் போடவே, அவர் மயங்கி கீழே விழுந்துவிடுவார். இந்த சீனை வைத்துதான் நெட்டிசன்கள் தேசிய அளவில் நேசமணிக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ப்ரண்ட்ஸ் படம் வெளியாகி 10 வருடங்கள் கடந்தாலும், இன்றளவும் இப்படத்தின் காமெடிகள், வசனங்கள் நம் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பது உண்மைதான் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த டிரெண்டிங் ஹேஷ்டாக் இருக்கிறது.
மேலும் பல நெட்டிசன்கள், வடிவேலுவின் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு, 'நேசமணி குணமாகும் வரை உண்ணாவிரதம்', 'நேசமணி குணமடைய மண்சோறு சாப்பிடுகிறோம்', 'நேசமணி நன்றாக வரும்வரை உலக கோப்பை நடக்காது'.
'நேசமணி எங்கள் உயிர்மூச்சு, நேசமணி குணமடைந்து வருகிறார். இப்போது தேறி விட்டார். அவர் நலனை காண லண்டனில் இருந்து மருத்துவர்கள் வந்துள்ளனர்' என சமூக வலைத்தளத்தை கலக்கி வருகின்றனர்.
Next Story
×