search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சரத் பவார் - தேவேந்திர பட்நாவிஸ்
    X
    சரத் பவார் - தேவேந்திர பட்நாவிஸ்

    சரத் பவார் உடன் தேவேந்திர பட்நாவிஸ் திடீர் சந்திப்பு: மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

    மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
    மகாராஷ்டிராவில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்து வருகிறார். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி உருவாகி ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முக்கிய காரணமாக இருந்தார்.

    இந்த கூட்டணியை கவிழ்க்க சரியான வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது பா.ஜனதா. இந்த நிலையில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் இன்று காலை திடீரென சரத் பவார் வீட்டிற்கு சென்று, அவரை சந்தித்தார். இதனால் மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த செய்தியை பட்நாவிஸ் டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். மேலும், இது தனிப்பட்ட முறையிலான சந்திப்பு எனப் பதிவிட்டுள்ளார். மகாராஷ்டிரா அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மராத்தா வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கியிருந்தது. இந்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

    இந்த இடஒதுக்கீடு பா.ஜனதா ஆட்சியில் கொண்டுவந்தது. உச்சநீதிமன்றத்தில் மாநிலத்தின் கருத்தை திறம்பட எடுத்துரைக்கவில்லை என பா.ஜனதா குற்றம்சாட்டியது. வருகிற ஐந்தாம் தேதி அரசுக்கு எதிராக பா.ஜனதா போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், மகாராஷ்டிர மாநில அமைச்சருமான நவாப் மாலிக் ‘‘இந்த சந்திப்பு குறித்து அதிக அளவில் யோசிக்க வேண்டும். மகாராஷ்டிராவில் ஆட்சி செய்யும் அரசு- எதிர்க்கட்சிகள் எதிரிகள் அல்ல. அவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வார்கள்’’ என்றார்.
    Next Story
    ×