search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஐ.சி.எம்.ஆர். பொது இயக்குனர் (இடதுபக்கம்)
    X
    ஐ.சி.எம்.ஆர். பொது இயக்குனர் (இடதுபக்கம்)

    பூஸ்டர் டோஸ் தற்போதைக்கு பொருத்தமானது அல்ல: ஐ.சி.எம்.ஆர்.

    இந்தியாவில் தகுதியுடைய நபர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில்தான் கவனம் என ஐ.சி.எம்.ஆர். பொது இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இரண்டு முறை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்த இரண்டு டோஸ்கள் கொண்ட தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கூடுதலாக ஒரு டோஸ் (பூஸ்டர்) செலுத்த நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைவரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா பூஸ்டர் டோஸ் செலுத்த தயாராகி வருகின்றன.

    இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தற்போதைக்கு வயது வந்தோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில்தான் இந்திய அரசின் முழுக்கவனம் இருக்கிறது. பூஸ்டர் டோஸ் என்பது தற்போதைய நிலையில் பொருத்தமானது அல்ல என ஐ.சி.எம்.ஆர். பொது இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×