search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    கேதார்நாத்தில் ரூ.130 கோடி மதிப்பிலான மறுமேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி

    வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் வழித்தடத் திட்டப் பணிகள் வேகமாக முன்னேறி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத்திற்கு சென்ற பிரதமர் மோடி, 12 அடி உயர ஆதி சங்கரர் சிலையை திறந்து வைத்து வழிபட்டார்.  மேலும், ரூ.130 கோடி மதிப்பிலான கேதார்நாத் மறுமேம்பாட்டு திட்டங்களை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    2013-ம் ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவுக்குப் பிறகு, கேதார்நாத்தை மீண்டும் உருவாக்க முடியுமா? என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால், கேதார்நாத்தை மறுகட்டமைப்பு செய்யயப்படும் என்று எனக்குள் ஒரு குரல் எப்போதும் சொல்லிக்கொண்டே இருந்தது.

    நான் டெல்லியில் இருந்து கேதார்நாத்தின் புனரமைப்பு பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்தேன். இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளின் முன்னேற்றத்தை 'ட்ரோன்' காட்சிகள் மூலம் ஆய்வு செய்தேன். இந்த பணிகளுக்கு வழிகாட்டியதற்காக இங்குள்ள அனைத்து அர்ச்சகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

    ஆன்மீகமும் மதமும் ஒரே மாதிரியான கருத்துக்களுடன் மட்டுமே தொடர்புடையதாக நம்பப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஆனால், இந்தியத் தத்துவம் மனித நலனைப் பற்றிப் பேசுகிறது, வாழ்க்கையை ஒரு முழுமையான முறையில் பார்க்கிறது. இந்த உண்மையை சமூகத்திற்கு உணர்த்த ஆதி சங்கராச்சாரியார் பணியாற்றினார்.

    இன்று இங்கு நடந்த ஆதி சங்கராச்சாரியார் சமாதி திறப்பு விழாவிற்கு நீங்கள் அனைவரும் சாட்சி. அவரது பக்தர்கள் இங்கு ஆத்மார்த்தமாக உள்ளனர். நாட்டில் உள்ள அனைத்து மடங்களும், ஜோதிர்லிங்கங்களும் இன்று நம்முடன் இணைக்கப்பட்டுள்ளன.

    பிரதமர் மோடி

    அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் அங்கு தீப உத்ஸவம் கொண்டாடப்பட்டது. வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் வழித்தடத் திட்டப் பணிகளும் வேகமாக முன்னேறி வருகின்றன. இப்போது, ​​நாடு உயரிய இலக்கை கொண்டுள்ளது. மேலும், இந்த நோக்கங்களை அடைய காலக்கெடுவையும் நிர்ணயித்துள்ளது.

    பக்தர்களுக்கு வசதியாக ஹேம்குண்ட் சாஹிப் அருகே சார் தாம்கள் மற்றும் ரோப்வேக்கு சாலை இணைப்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த தசாப்தம் உத்தரகாண்டிற்கு சொந்தமானது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலம் அதிக சுற்றுலாப் பயணிகளைப் பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    Next Story
    ×