என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாடியா சாலை விபத்து- இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த பிரதமர்
Byமாலை மலர்28 Nov 2021 5:46 PM IST (Updated: 28 Nov 2021 5:46 PM IST)
நாடியா சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில், இறந்தவரின் உடலை ஏற்றிக்கொண்டு சுடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்வதற்காக சுமார் 35 பேர் சென்றுகொண்டிருந்த வாகனம் இன்று அதிகாலையில் விபத்தில் சிக்கியது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது அந்த வாகனம் மோதியதில், 18 பேர் பலியாகினர். சிலர் காயமடைந்தனர். பனிமூட்டம் காரணமாக முன்னால் நின்றிருந்த லாரி தெரியாததால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடியா சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறி உள்ளார்.
மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
Next Story
×