search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    சந்திரசேகர ராவ் - உத்தவ் தாக்கரே
    X
    சந்திரசேகர ராவ் - உத்தவ் தாக்கரே

    உத்தவ் தாக்கரேயுடன் 20-ந் தேதி சந்திரசேகர ராவ் சந்திப்பு

    தெலுங்கானா முதல்- மந்திரியும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவும் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
    ஐதராபாத்:

    பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், இடது சாரிகள் அல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்காள முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முயற்சித்து வருகிறார்.

    இந்த நிலையில் தெலுங்கானா முதல்- மந்திரியும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகர ராவும் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    அவர் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவேகவுடாவை நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

    தேவேகவுடா

    புதிய கூட்டணி அமைக்கும் முயற்சியின் அடுத்த கட்டமாக சந்திரசேகர ராவ், மராட்டிய முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேயை மும்பையில் வருகிற 20-ந் தேதி சந்திக்க உள்ளார். இதுகுறித்து தெலுங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    உத்தவ் தாக்கரே கடந்த புதன்கிழமை சந்திரசேகர ராவை தொலைபேசியில் தொடர்புகொண்டு மும்பை வருமானு அழைப்பு விடுத்தார்.

    மேலும் பா.ஜனதாவின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக சந்திரசேகர ராவின் போராட்டத்துக்கு உத்தவ் தாக்கரே முழு ஆதரவு தெரிவித்தார். இந்த அழைப்பை ஏற்று வருகிற 20-ந் தேதி தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மும்பை செல்கிறார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உத்தவ் தாக்கரேயுடனான சந்திப்பின் போது முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×