search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    விமானத்திற்குள் இந்தியர்களை வரவேற்கும் முக்தார் அப்பாஸ் நக்வி
    X
    விமானத்திற்குள் இந்தியர்களை வரவேற்கும் முக்தார் அப்பாஸ் நக்வி

    ஹங்கேரியில் இருந்து 6வது சிறப்பு விமானம் மூலம் 240 இந்தியர்கள் டெல்லி வந்தனர்

    விமானத்திற்குள் சென்று அவர்களை மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி வரவேற்றார்.
    புதுடெல்லி:

    உக்ரைன்-ரஷியா போரினால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை அண்டை நாடுகள் உதவியுடன் மீட்கும் ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ்  மீட்புப் பணிகளை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

    ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 249 இந்தியர்களுடன் 5-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தது. 

    இதேபோல்  240 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இருந்து ஆறாவது விமானம் நேற்று இரவு டெல்லி வந்தடைந்தது. 

    விமான நிலையத்தில் தரையிறங்கிய அந்த விமானத்திற்குள் சென்ற மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி இந்தியர்களை வரவேற்றார்.

    உக்ரைனில் இருந்து டெல்லி வந்தடைந்த மாணவிகள்

    உக்ரைனில் இருந்து தங்களை பாதுகாப்பாக மீட்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், பல மாணவர்கள் இன்னும் போர்ப் பகுதிகளில் சிக்கித் தவிக்கின்றனர் என்று உக்ரைனில் இருந்து டெல்லி வந்த மாணவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×