search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    டிரோன் (கோப்பு படம்)
    X
    டிரோன் (கோப்பு படம்)

    ஜம்மு சர்வதேச எல்லையில் பறந்த பாகிஸ்தான் டிரோன் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு

    எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் (பி.எஸ்.எப்.) அந்த டிரோன் மீது துப்பாக்கியால் சுட்டனர். 10 நிமிடத்தில் 18 முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    ஜம்மு:

    ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சந்தேகிக்கப்படும் வகையில் பாகிஸ்தான் டிரோன் ஒன்று பறந்தது.

    இதை பார்த்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் (பி.எஸ்.எப்.) அந்த டிரோன் மீது துப்பாக்கியால் சுட்டனர். 10 நிமிடத்தில் 18 முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அந்த டிரோன், ஜம்மு சர்வதேச எல்லையில் பறந்தவாறே மறைந்து விட்டது.

    சந்தேகத்துக்கிடமான பாகிஸ்தானின் அந்த டிரோன் எல்லை பகுதியில் எதை வீசி சென்றது என்பது குறித்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. டிரோன் பறந்த பகுதியில் எந்தவித ஆயுதமோ, போதை பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

    இதுதொடர்பாக எல்லை பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “அதிகாலை 4.30 மணி அளவில் ஆர்னியாவின் புது பகுதிக்குள் சந்தேகத்துக் கிடமான ஆளில்லா டிரோன் சத்தம் கேட்டது. ஒலி வந்த திசையை நோக்கி துப்பாக்கியால் சுட்டோம்” என்றார்.

    Next Story
    ×