search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
    X
    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

    மக்கள், கொரோனா நோயாளிகள் மீது பிரதமருக்கு அக்கறை இல்லை- ராகுல் காந்தி

    ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கொரோனா நோயாளிகளுக்கு பெரிதளவில் இலவச சிகிச்சை அளிக்கவில்லை என்ற செய்தியை மேற்கோள் காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
    இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்குலைவு காரணமாக தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகவும், அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கொரோனா நோயாளிகள் இலவச சிகிச்சை பெறவில்லை என்ற செய்தியை மேற்கோள் காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.   

    இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:-

    மக்கள், தொழிலாளர்கள் மற்றும் கொரோனா நோயாளிகள் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு அக்கறை இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டதா? இல்லை. ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச வருமானம் கிடைத்ததா ? இல்லை. சிறு தொழில்கள் பாதிப்படையாமல் காப்பாற்றப்பட்டதா? இல்லை. பிரதமர் எதற்கும் கவலைப்படவில்லை.

    வேலை மற்றும் வருமானத்தை இழந்த இந்தியர்களிடையே அதிகளவில் தற்கொலைகள். மிகைப்படுத்தப்பட்ட உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் மருத்துவமனைக் கட்டணங்களைச் செலுத்தத் தவறவிட்டது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் 12 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இதையும் படியுங்கள்.. சாக்கடையை சுத்தம் செய்த ஆம் ஆத்மி கவுன்சிலருக்கு பாலாபிஷேகம் செய்த மக்கள்
    Next Story
    ×