search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மைசூருவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் ஆசிரியைகள் மாணவர்களின் பதிவு எண்ணை மேஜைகளில் எழுதிய காட்சி.
    X
    மைசூருவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் ஆசிரியைகள் மாணவர்களின் பதிவு எண்ணை மேஜைகளில் எழுதிய காட்சி.

    கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை நாளை தொடங்குகிறது: ‘ஹிஜாப்’ அணிந்து தேர்வு எழுத தடை

    ஹிஜாப் விவகாரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. உள்ளிட்ட பொதுத்தேர்வை எழுதாமல் தேர்வை புறக்கணிப்போருக்கு மறுதேர்வு நடத்தப்படாது என்று ஏற்கனவே மந்திரி பி.சி.நாகேஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வர மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் தொடர்ந்த வழக்கில் பள்ளி, கல்லூரிகளில் மத அடையாள ஆடைகளை அணிய தடை விதித்த அரசின் உத்தரவு செல்லும் என பெங்களூரு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நாளை(திங்கட்கிழமை) தொடங்குகிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத வருபவர்களும் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்றும், ஹிஜாப் அணிந்து வந்து தேர்வு எழுத தடை விதித்தும் கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

    மாநில அரசின் இந்த உத்தரவு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் முஸ்லிம் மாணவிகள் இடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிஜாப் அணிந்து வந்தால், சம்பந்தப்பட்ட மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஹிஜாப் விவகாரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. உள்ளிட்ட பொதுத்தேர்வை எழுதாமல் தேர்வை புறக்கணிப்போருக்கு மறுதேர்வு நடத்தப்படாது என்று ஏற்கனவே மந்திரி பி.சி.நாகேஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிக்கலாம்...பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு: இம்ரான்கான் கட்சியின் 50 மந்திரிகள் மாயம்
    Next Story
    ×