என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கேரளாவில் கோவில் விழாவில் கதகளி நடனமாடிய வயநாடு மாவட்ட பெண் கலெக்டர்
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்ட கலெக்டராக இருப்பவர் கீதா.
இவருக்கு சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது ஆர்வம் அதிகம். பள்ளி பருவம் முதல் கல்லூரி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் நடனமாடி உள்ளார்.
கலெக்டர் பொறுப்புக்கு வந்த பின்பும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடன பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
மேலும் கேரள பாரம்பரிய நடனமான கதகளியையும் கற்று வந்தார். இந்த நிலையில் வயநாடு பகுதியில் உள்ள வள்ளியூர் காவு கோவில் விழாவில் கலெக்டர் கீதாவின் கதகளி நடன அரங்கேற்றம் நடைபெற்றது.
இதில் கலெக்டர் கீதா, தமயந்தி வேடம் அணிந்து நடனமாடினார். அவருடன் ஏனைய கலைஞர்களும் பங்கேற்றனர். இந்த நடனத்தை பார்த்த பக்தர்கள் மற்றும் பெண்கள் கலெக்டரை பாராட்டினர். கலெக்டர் கதகளி நடனம் ஆடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு