search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பள்ளி வகுப்பறையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5 ஆசிரியர்கள் கைது
    X

    பள்ளி வகுப்பறையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5 ஆசிரியர்கள் கைது

    • நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து தனியார் தன்னார்வ அமைப்பு ஒன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • போலீசார் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 5 ஆசிரியர்களை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் உள்ள பழங்குடியின மாணவிகளிடையே நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து தனியார் தன்னார்வ அமைப்பு ஒன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது தன்னார்வலர்கள் அங்குள்ள மாணவிகளிடம் இதுபோன்ற சம்பவம் ஏதாவது உங்களுக்கு நிகழ்ந்து உள்ளதா என கேட்டனர்.

    அப்போது மலைக்கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பில் படிக்கும் மாணவிகள் தங்களுக்கு பாலியல் தொல்லை நடந்ததாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து புகார் எழுதி அவர்கள் வைத்திருந்த பெட்டியில் போட்டனர்.

    மாணவிகள் தங்களிடம் 5 ஆசிரியர்கள் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்திருந்தனர்.

    இதுகுறித்து தன்னார்வலர்கள் மாவட்ட கல்வி அதிகாரி சலீம் பாஷாவுக்கு தெரிவித்தனர். அவரது உத்தரவின் பேரில் மண்டல கல்வி அலுவலர், பெண் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரிகள் ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர்.

    இதில் பள்ளி வகுப்பறையில் 5 ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

    விசாரணையில் பாலியல் தொல்லை உறுதி செய்யப்பட்டது. இது குறித்து கல்வி அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 5 ஆசிரியர்களை கைது செய்தனர். அவர்களை ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×