search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வளர்ப்பு நாயை கிண்டல் செய்த 5 வயது சிறுவனை தூக்கிப்போட்டு மிதித்த வெறி பிடித்த ஓனர் - வீடியோ
    X

    வளர்ப்பு நாயை கிண்டல் செய்த 5 வயது சிறுவனை தூக்கிப்போட்டு மிதித்த வெறி பிடித்த ஓனர் - வீடியோ

    • தன்னைப் பார்த்து குறைத்த நாயை பார்த்து தானும் குறைக்கும்விதமாக குரல் எழுப்பியுள்ளான்
    • சிறுவனை தரையில் தூக்கி வீசி, காலால் எட்டி மிதித்துள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தில் தனது வளர்ப்பு நாயைக் கிண்டல் செய்ததாக 5 வயது சிறுவனை நாயின் உரிமையாளர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொகாலி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 2 சிறுவர்கள் டியூசன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த சிறுவர்களைப் பார்த்து நாய் குறைக்கத் தொடங்கியுள்ளது.

    அதில் ஒரு 5 வயது சிறுவன் நாய் தன்னை பார்த்து குறைப்பதுபோல் தானும் நாயை பார்த்து குறைக்கும்விதமாக குரல் எழுப்பியுள்ளான். தனது செல்லப் பிராணி கேலிசெய்யப்படுவதைச் சகித்துக்கொள்ள முடியாத நாயின் ஓனர், சிறுவன் என்றும் பார்க்காமல் வெறி பிடித்ததுபோல் அவனை பிடித்து சரமாரியாக அடித்துள்ளார். சிறுவனை தரையில் தூக்கி வீசி, காலால் எட்டி மிதித்துள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சிறுவனை தாக்கிய நாய் ஓனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசும் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×