என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நீட் தேர்வில் 705/720.. பிளஸ் 2 ஃபெயில்.. மறு தேர்விலும் ஃபெயில்.. குஜராத் மாணவி மார்க் சீட் வைரல்
- இயற்பியலில் 22 மதிப்பெண்களும், வேதியலில் 33 மதிப்பெண்களும் மட்டுமே எடுத்துள்ளார்.
- நீட் தேர்வில், வேதியியலில் 99.86 சதவீத மதிப்பெண்களும், இயற்பியலில் 99.89 சதவீத மதிப்பெண்களும் எடுத்துள்ளார்
நீட் தேர்வு முறைகேடு நாட்டின் அரசியல் மற்றும் சமூக சூழலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குஜராத்தில் நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவி பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஃபெயில் ஆகியுள்ளார். அதற்கு நடத்தப்பட்ட மறு தேர்விலும் ஃபெயில் ஆகியுள்ளார்.
கடந்த மே 5 ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை நீட் தேர்வு நாடு முழுவதும் தேசிய தேர்வு முகாமையால் நடத்தப்பட்டது. அந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 720 க்கு 705 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
ஆனால் அவர் கடந்த மார்ச் மாதம் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் அதன்பின்னர் வெளியாகியுள்ளது. அதில் அறிவியல் பாடங்களில் அவர் ஃபெயில் ஆகியுள்ளார். அதற்காக அவர் சம்ப்ளிமெண்டரி எக்ஸாம் எனப்படும் மறு தேர்வு எழுதிய நிலையில் அதிலும் அவர் தோல்வியடைந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
இந்த மறு தேர்வில் அறிவியல் பாடங்களான இயற்பியலில் 22 மதிப்பெண்களும், வேதியலில் 33 மதிப்பெண்களும் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் நீட் தேர்வில், வேதியியலில் 99.86 சதவீத மதிப்பெண்களும், இயற்பியலில் 99.89 சதவீத மதிப்பெண்களும், உயிரளியலில் 99.14 மதிப்பெண்களும் பெற்று மொத்தமாக 705/720 எடுத்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக இந்த வருட நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.