search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நேரடியாக அலுவலகம் வந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு தரவே 91% சி.இ.ஓ விரும்புகின்றனர்
    X

    நேரடியாக அலுவலகம் வந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு தரவே 91% சி.இ.ஓ விரும்புகின்றனர்

    • கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர் வேலையிடங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளானது.
    • அலுவலகத்திற்கு நேரடியாக வேலைக்கு வராமல் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் முறை அதிகமானது.

    உலகம் முழுவதும் 87% தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) அலுவலகத்தில் தொடர்ந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெகுமதி அளிக்கத் தயாராக உள்ளனர் என்றும் இந்தியாவில் இந்த விகிதம் 91% ஆக உள்ளது என்று KPMG India CEO Outlook இன் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    125 இந்திய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் உடைய பதில்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. பதிலளித்த அனைத்து நிறுவனங்களின் ஆண்டு வருமானம் 4,200 கோடிக்கும் அதிகமாகும்.

    கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர் வேலையிடங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளானது. அலுவலகத்திற்கு நேரடியாக வேலைக்கு வராமல் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் முறை அதிகமானது.

    இந்நிலையில் அனைத்து பணியாளர்களும் அலுவலகத்தில் வந்து வேலை பார்க்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள தலைமை நிர்வாக அதிகாரிகளில் 78% பேர் விரும்புகின்றனர். உலக அளவில் இந்த விகிதம் 83% ஆக உள்ளது.

    இந்தியாவில் உள்ள 50% தலைமை நிர்வாக அதிகாரிகள், தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் முன்னுரிமை அளித்து வருகின்றனர்.

    Next Story
    ×